/indian-express-tamil/media/media_files/Sk2byHHg4Nu4gddziRTg.jpg)
Coimbatore
சட்டையால் முகத்தை மறைத்தபடி நள்ளிரவு நேரத்தில் கோவையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், செல்போன்களை திருடிச் செல்லும் சி.சி.டி.வி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் 7வது வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் மீனாட்சி. இவருக்கு விஷ்ணு மற்றும் குகன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மூவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது மீனாட்சியின் செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து மீனாட்சியின் தொடர்பு எண்களுக்கு அவரது மகன்கள் அழைத்த போது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.
Video: கோவை காந்திபுரம் 7வது வீதியில் சட்டையால் முகத்தை மறைத்தபடி நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்
— Indian Express Tamil (@IeTamil) April 30, 2024
செல்போன்களை திருடிச் செல்லும் அதிர்ச்சி சி.சி.டி.வி வீடியோ#Coimbatorepic.twitter.com/6uOz7Q9rQm
பணம் மற்றும் நகைகள் எதுவும் காணாமல் போகாத நிலையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் நள்ளிரவு நேரத்தில் முகத்தை மறைத்தபடி வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், காம்பவுண்ட் சுவரில் குதித்து வீட்டின் உள்ளே புகுந்து 2 ஆண்ட்ராய்டு போன்களை மட்டும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற காட்சிகள் பதிவாக இருந்தன.
சிசிடிவி காட்சி ஆவணங்களுடன் மீனாட்சி மற்றும் அவரது மகன்கள் சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் நள்ளிரவில் முகத்தை மறைத்தபடி வீட்டுக்குள் புகுந்து செல்போன்களை மட்டும் குறிவைத்து திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us