Advertisment

கோவை: ஊராட்சி தலைவர் தேர்தல்: 8 மணி நேரம் நடந்த வாக்கு எண்ணிக்கை

2019-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை சுமார் 8 மணி நேரம் நடைபெற்று முடிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
coimbatore news, latest coimbatore news, latest tamil news, tamil nadu news

2019-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை சுமார் 8 மணி நேரம் நடைபெற்று முடிந்துள்ளது.

Advertisment

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா, அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர்.

publive-image

சுதா

இதில் திமுக ஆதரவு பெற்ற சுதா 2553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வாக்கு எண்ணப்பட்டு அதில் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 2554 வாக்குகளும், சுதா 2551 வாக்குகளும் பெற்று 3 வாக்குகள் வித்தியாசத்தில் செளந்திரவடிவு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது. இதை எதிர்த்து வேட்பாளர் சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

publive-image

சௌந்திரவடிவு

இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த 5 ம் தேதி உத்தரவிட்டு அடுத்த 15" நாட்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.

publive-image

இதனைத் தொடர்ந்து 24"ம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இது தொடர்பான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்டது.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலராக பி.ஸ்ரீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி இன்று குருடம்பாளையம் அருணா நகர் சமுதாய கூடத்தில் வாக்கு எண்ணிக்கை 12 மணியளவில் துவங்கியது. இதற்கான வாக்கு பெட்டிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது.

தேர்தலில் மூன்றாவதாக மல்லிகா என்பவரும் போட்டியிட்டிருந்தார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணும் பணி இரவு 8 மணி வரை நடைபெற்று முடிவடைந்துள்ளது. இவை ஒவ்வொரு வாக்கும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

publive-image

தொடர்ந்து வேட்பாளர்கள் முன்னிலையில் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

நீதிமன்றம் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் ஓட்டு என்னும் பணியில் ஏ.டி.எஸ்.பி ரவிச்சந்திரன், டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் குடியரசு தினம் முடிந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coimbatore Local Body Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment