/indian-express-tamil/media/media_files/tDrOHaTJCVmawp3Hy43X.jpeg)
Coimbatore
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள புரோஜோன் மால் வர்த்தக வளாகத்தில் கண்ணை கவரும் வகையில் 50 அடி உயரத்திற்கு உலக அதிசயங்களில் ஒன்றான ‘ஈபிள் டவர்’ அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கோவைபுரோஜோன் மால் வர்த்தக வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கிறிஸ்துமஸ் மரங்களும், அலங்கார தோரணங்களுடன் முகப்பு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சுமார் 50 அடி உயரத்தில் உலக அதிசயங்களில் ஒன்றான புகழ் பெற்ற ஈபிள் டவர் நிறுவப்பட்டுள்ளது.
வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கோபுரம் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.
வருகிற 31 ஆம் தேதி வரை இந்த டவர் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் 10 முதல் 60 சதவீதம் வரைதள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளது.இதில் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளன என புரோஜோன் மாலின் இயக்குனர் விஜய் பாடியா மற்றும் விற்பனை பிரிவுதலைவர் பிரிங்ஸ்டன் நாதன் ஆகியோர் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.