கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மண்டலத்தில் இருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தில் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை (25:12.2023) முன்னிட்டு 22.12.2023 முதல் 26.12.2023 வரை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாகர்கோயில், தேனி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“