மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கியதற்கு கோவை சிஐஐ தொழில் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. கோவை சுங்கம் அருகே உள்ள சி.ஐ ஐ தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தில் மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இன்று மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதற்கு கோவையைச் சேர்ந்த பல்வேறு நடுத்தர மற்றும் சிறுதொழில் அமைப்புகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதில் சுங்கம் அருகே உள்ள சிஐஐ தொழில் கூட்டமைப்பின் சார்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நல்லது என தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, சி.ஐ.ஐ தலைவர் பிரசாந்த் கூறியதாவது:
இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் விவசாயம், கல்வி, போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல கோவை மண்டலத்தில் சி. ஐ.ஐ சார்பில் டூரிசம், எம். எஸ். எம். இ. கிரௌத், அக்ரீ, டேலண்ட் போன்றவைகள் தொடர்பான முயற்சிகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதில் நாங்கள் அடையாளப்படுத்தியது இந்த பட்ஜெட்டில் வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
அதேபோல, சி.ஐ.ஐ துணைத் தலைவர் செந்தில் கூறியதாவது:
விவசாயிகளின் வருமானம் குறைவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்த விவசாயிகளுக்கான திட்டத்தை செயல்முறைக்கு கொண்டு வரும்பொழுது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
அதேபோல, டிஜிட்டல் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள். அதேபோல, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அறிவிப்பு வந்துள்ளதால் தொழில்துறையில் சாதகம் ஏற்படும். பொருளாதாரம் உயரும். பினான்சியல் சிஸ்டம் பலப்படுவதால் சாதகமான சூழல் ஏற்படும்.
நாங்கள் எதிர்பார்த்தது பெரிதாக வராதது போல் தெரியவில்லை. இது ஒரு பேன் இந்தியா பட்ஜெட். எந்த ஒரு துறை என ஒதுக்காமல் எல்லா துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் மூலப்பொருள் கட்டுப்பாடு என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால், மூலப்பொருள் பிரச்சனை சமீபமாக குறைந்து வருகிறது. தனி நபர் வருமானம் அறிவிப்பு வரவேற்புகுரியது இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“