கோவை உக்கடம் பகுதியில் உள்ள அன்பு நகர், பொன்விழா நகர், அருள் நகர், சூப்பர் கார்டன் ஆகிய பகுதிக்கு உட்பட்ட தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், குப்பையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதி அடைந்து வருகிறோம், இந்த குப்பையினால் இரண்டு உயிர்கள் பறிபோய் விட்டது.
இந்தப் பகுதியில் துர்நாற்றத்துடன் வாழ முடியவில்லை, மாலை பொழுதிற்கு மேல் சுவாசிக்க முடியவில்லை. இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது, குடிநீரிலும் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“