scorecardresearch

ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவி, ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்கள் – கோவையில் அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!

Tamilnadu CM MK Stalin laid the foundation stone for Rs.663 crore new projects and Rs. 588 crore welfare assistance in Coimbatore Tamil News: கோவையில், முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Coimbatore: cm mk Stalin laid the foundation stone for Rs.663 crore new projects
Coimbatore – Tamilnadu CM MK Stalin Tamil News

Coimbatore News in Tamil: கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, ஈச்சனாரி, இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாடினார்.

அதனைத்தொடர்ந்து 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும், 267.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 226 பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இதன்பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘கோவை மாவட்டம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

*கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ. 1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

மேலும், ‘அனைத்து துறைகளிலும் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் உற்றுநோக்கி வருகிறார்கள். கட்டணமில்லா பேருந்து, இலவச மின்சாரத்தை சுட்டிக்காட்டி கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசி இருந்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore cm mk stalin laid the foundation stone for rs 663 crore new projects