Coimbatore Codissia Corona center dog drags used ppe kit from the center : கோவையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் 400 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் கடந்த திங்கள்க்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க : இந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா?
இந்த மையத்தில் பணியில் இருக்கும் அனைத்து மருத்துவர்களும், முன்கள பணியாளர்களும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பி.பி.இ. எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்தல், பயன்படுத்திய முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அப்புறப்படுத்துதல் போன்றவைகளை முறையாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகளை கொடிசியா வளாகத்தில் அப்படியே போட்டுவிட நாய் ஒன்று அதனை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறது.
இது போன்ற அலட்சிய போக்கால் மேலும் கொரோனா பரவ தான் வாய்ப்புகள் உருவாகும். இது போன்ற அலட்சிய மனப்பான்மையை கைவிட்டு பாதுகாப்பான முறையில் முன்களபணியாளர்கள் பயன்படுத்தும் உடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Coimbatore codissia corona center dog drags used ppe kit from the center