கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும் லங்கா கார்னர் மேம்பாலம் கிக்கானிக் மேம்பாலத்திற்கு அடியிலும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/v2wGjpIntbMcE3A0e8LR.jpeg)
இந்நிலையில் கோவையில் மழை பாதிப்புகளுக்கு உள்ளான பல்வேறு பகுதிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன்படி கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு அடியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தனர் அதனைத் தொடர்ந்து லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மருதமலை பகுதி ஐ.ஓ.பி காலணியில் மழையின் காரணமாக சேதம் அடைந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு அதனை சரி செய்யும் பணிகளை விரைவுப்படுத்திட அறிவுறுத்தினர்.
/indian-express-tamil/media/media_files/fqLtYCoHa4y9sSwItQkg.jpeg)
அதனைத் தொடர்ந்து செல்வபுரம் பகுதி அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து முழங்கால் அளவிற்கு வெளியேறியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்த தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மழை பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளை காண்பித்து மழைநீர் வெளியேறுவதற்கான காரணங்களை சுட்டி காட்டினார். அப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை விரைவு படுத்திடவும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“