Advertisment

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: கோவை மாநகராட்சி பள்ளியில் ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

author-image
WebDesk
Mar 13, 2023 13:03 IST
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: கோவை மாநகராட்சி பள்ளியில் ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று (மார்ச் 13) முதல் பொதுத் தேர்வு தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 128 மையங்களில் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் ஆய்வு செய்தார். கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அமர்ந்திருந்த பொதுத் தேர்வு மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Advertisment

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் 128 மையங்களில் 35 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் 186 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதல் நேர அவகாசம் வழங்கப்படும். 180 பறக்கும் படையினர் ஆய்வுப் பணியில் உள்ளனர்" என்றார்.

publive-image

தொடர்ந்து, "கோவையில் காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீலகிரியில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மாணவிகள் ஜெனரல் வார்டிலும், ஒருவர் ஐ.சி.யூ வார்டிலும் கண்காணிப்பில் உள்ளார். அவர்களை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்" என்று அவர் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

#Coimbatore #Tn Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment