கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நிவாஸன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று (மார்ச் 4) மனு அளிப்பதற்காக அலுவலகம் வந்துள்ளார் .
இந்த நிலையில் கொரோனா காலத்தில் வாங்கிய சிறு கடனை அடைப்பதற்காக மேலும் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் ,இந்த கடனை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதால் இதனை உடனடியாக சரி செய்ய தன் தந்தையின் சொத்தை முழுமையாக தர வேண்டும். தன் தந்தை இறந்து 7 வருடங்கள் ஆகி விட்டது என்று மனுவில் கூறியுள்ளார்.
மனுவை கொண்டு வந்த உடனேயே ஆட்சியர் அலுவலத்தில் வைத்து நிவாஸன் கையை அறுத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி பந்தய சாலை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/nyzBdrr7hcGgOXAgLm4a.jpeg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“