கோவை: திருவாதிரை களி நடனம் ஆடி ஓணம் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்
Coimbatore pirava-se college kerala girls students performed Tiruvadhirai Kali dance Tamil News: கோவை தனியார் கல்லூரியில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாணவிகள் 30 பேர் பரம்பரிய உடை அணிந்து திருவாதிரை களி நடனம் ஆடி சிறப்பித்துள்ளனர்.
Coimbatore - Tiruvadhirai Kali dance - kerala girls students Tamil News
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
Advertisment
கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் திருவாதிரை களி நடனம் கைகட்டி களி நடனம், புலி களி ஆகிய நடனங்கள் கொண்டாடப்படும். அதேபோல ஓணம் பண்டிகை ஒட்டி வீட்டிற்கு முன்பாக ஒவ்வொரு நாளும் மகாபலி வரவேற்க பூக்காலம் போட்டு வைப்பார்கள் ஓணம் பண்டிகை ஒட்டி சாப்பாடு - சாம்பார் கூட்டு - கறி அவியல் காளான் - புலி இஞ்சி - மாங்காய் ஊறுகாய் - பாயாசம் - பப்படம் சக்கரை - உப்பேரி உள்ளிட்ட பத்து வகை உணவுப் பொருட்கள் வைத்து கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருவாதிரை களி நடனம் மூன்று நாட்கள் பயிற்சி எடுத்து நடனம் ஆடி உள்ளோம் என்பதும் கேரள பாரம்பரிய நடனத்தை ஆடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என நடனமாடிய நிர்மலா கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.