பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore: கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பில்டர் அசோசியேசன் ஆப் இந்தியா கோவை மையம், கிரடாய் அமைப்பு கோவை கோயம்புத்தூர் பில்டர்ஸ் அண்ட் காண்ட்ராக்டர் அசோசியேஷன் கோவை, கோயம்புத்தூர் மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் - கோவை, அசோசியேஷன் ஆஃப் எசிஇ சிவில் இன்ஜினியர்ஸ் பொள்ளாச்சி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கனிம பொருட்களின் விளைவு வியர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கோவை அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க தலைவர் கணேஷ் குமார், கோவை கிரடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்க, தலைவர் சகாயராஜ், கோவை, மேனுபேக்ச்சரர் அசோசியேசன் தலைவர் சத்பத்குமார், கோவை, காட்சியா அமைப்பின் தலைவர் ரமேஷ்குமார், மற்றும் பொள்ளாட்சி, ஏஸ்.சி.வில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“