Advertisment

மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தது ஏன்? கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Corporation Commissioner Sivaguru Prabakaran on Why Mayor Kalpana Anandakumar resigned Tamil News

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா; மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கம்.

தமிழகத்தில் சென்னையை அடுத்த மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோயம்புத்தூர் என்கிற கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 97 பேர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். மேலும் மூன்று பேர் அ.தி.மு.க கவுன்சிலர்கள்.  

Advertisment

இந்நிலையில், கோவை மாநகராட்சி தேர்தலில் 19 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார் கல்பனா ஆனந்தகுமார். தி.மு.க வைச் சேர்ந்த அவர் மேயராக பதவி வகித்து வந்த சூழலில், இன்று புதன்கிழமை தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது கோவை தி.மு.க-வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ராஜினாமா 

கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரனிடம் வழங்கியுள்ளார்.  அரசியல் அனுபவம் இல்லாத கல்பனா ஆனந்தகுமார் கோவை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. மேயரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கல்பனா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மேயர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தார் கல்பனா ஆனந்தகுமார். அவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க வில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாநகராட்சி மேயர் கல்பனாவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

மேயர் கல்பனா பதவியை ராஜினாமா செய்த நிலையில் இனி அந்த பதவியை கைப்பற்றும் அடுத்த தி.மு.க பெண் கவுன்சிலர் யார்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

விளக்கம் 

இதனிடையே, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தனிப்பட்ட காரணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக கோவை மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கல்பனா" என்று தெரிவித்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment