கோவை, டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்றக் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆண்டுக்கு 6% உயர்வு என்பதை கைவிட வேண்டும் எனவும் மேயரிடம் மனு அளித்தனர். மேலும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போலவே கோவையிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த மேயர் ரங்கநாயகி, 6% வரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு துறை அமைச்சருக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும், அமைச்சரை நேரடியாகச் சந்தித்து கடிதம் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
இதனிடையே, அ.தி.மு.க கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படாததால், அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க கவுன்சிலர்களின் வெளிநடப்பு, கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வெளிநடப்பு குறித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கோவை மாநகராட்சி வரலாற்றையே இன்று முக்கியமான நாள். இதுபோன்ற கூட்டத்தை எந்த மாநகராட்சியும் நடத்தி இருக்காது. காலையில் ஒரு கூட்டம் அதிக வேலையில் பட்ஜெட், இதுபோன்று எங்காவது நடக்குமா,? அப்படி ஒரு அநியாயத்தை கோவை மாநகராட்சி செய்து கொண்டு இருக்கிறது.
இந்த சாதாரண கூட்டத்தில், 132 சப்ஜெக்ட்கள் விவாதிக்கப்படுகிறது. 54 சப்ஜெக்ட்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டு விட்டது. நேற்று இரவு 82 சப்ஜெக்ட்டை கொடுக்கிறார்கள் எப்படி படித்து புரிந்து கொள்ள முடியும். மாமன்ற உறுப்பினர்கள் அதற்கு உள்ளாக எப்படி அதை படித்து புரிந்து கொள்ள முடியும். இங்க இருக்கக் கூடிய தி.மு.க அமைகிறது இந்த 132 பொருட்கள் பற்றி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? மேயாதாவது அதைப் படித்து பார்த்து புரிந்து இருப்பாரா ? அவ்வளவாக கோவை மாநகராட்சி சீர் கெட்டு கிடக்கிறது.
அதே போல, கிட்டத்தட்ட நேற்று 152+ வரி என 172 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு குப்பைக்கு டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. சாதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் லோன் வாங்க வேண்டும் என்றாலும் கூட, வங்கியில் எவ்வளவு கண்டிஷன் போடுகிறார்கள். 172 கோடி சப்ஜெக்ட்டை, ஒரு பத்து வரியில் முடித்து சப்ஜெக்டாக கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த கம்பெனிக்கு டெண்டர் கொடுக்கிறோம் அவ்வளவு தான் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் அவர்கள் எங்கு குப்பை எடுத்து இருக்கிறார்கள் எவ்வளவு எடுத்து இருக்கிறார்கள் போன்ற எந்த விளக்கமுமே அதில் குறிப்பிடப்படவில்லை. கடந்த இரண்டரை வருடங்களாக தனியாருக்கு டெண்டர் விற்று இருக்கிறார்கள். அதில் மாநகராட்சி பணியாளர்கள் 3000 பேர் வேலை செய்து இருக்கிறார்கள். அவர்களின் சம்பளத்தை எப்படி பெறுவது. மாநகராட்சி பணியாளர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கிறது, இவர்களிடம் வேலை வாங்கி விட்டு அந்த பணத்தை அவர்கள் எடுத்துச் செல்கிறார்களா?அ ப்படியானால் இதில் எவ்வளவு கோடி ரூபாய் ஊழல் நடந்து இருக்கிறது ? இதை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.
குப்பைக்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு இருப்பது, பெருமளவில் கோவை மாநகராட்சியில் ஊழல் நடந்திருக்கிறது. அவர்கள் இதற்காக ஒரு சிங்கிள் ஆட்டோ கூட வாங்கி கொடுக்கவில்லை, கோவை மாநகராட்சியின் பொருட்களை வைத்தே குப்பை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். மாநகராட்சி பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தை வாங்கி கொடுத்து இருக்கிறார்களா? எதுவுமே செய்யவில்லை.. அதே போல கோவைபுதூர், பீளமேடு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10 கோடி ரூபாய் செலவில் குப்பை கிடங்கு அமைக்கப்படுகிறது.
வெள்ளலூரில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்றால் அந்த குப்பை நேராக அங்கே கொண்டு போய் கொட்டலாமே. அதேபோல வெள்ளலூர் பஸ் ஸ்டாண்டை காய்கறி மார்க்கெட் ஆக மாற்ற வேண்டும் லாரி மார்க்கெட்டாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அங்கு யாரும் வரவில்லை, ஆனால் இப்போது ஏதோ ஒரு லெட்டர் பேடை வைத்து அங்கு ஒரு கம்பெனி ஆரம்பிப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். மாநகராட்சி எங்கயுமே குப்பைகளை எடுப்பது இல்லை, மூட்டை மூட்டையாக ஊரெல்லாம் குவிந்து கிடக்கிறது. சென்டர் விட்டதில் முறைகேடு நடந்திருக்கிறது அதற்காகவே இன்று குப்பைகளை கொண்டு வந்து இங்கு போட்டு போராட்டம் செய்து கொண்டு இருக்கிறோம்." என்று அவர்கள் கூறினார்கள்.