கோவை ஆலாந்துறை அருகே அரசு பேருந்து மோதியதில், சைக்கிளில் சென்ற கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Advertisment
கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37) இவரது மனைவி தேவி (31). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் பூளுவாம்பட்டி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரன், தேவி இருவரும் இன்று காலை சிறுவாணி சாலையில் சைக்கிளிலில் சென்றுள்ளனர். அப்போது ஆலாந்துறை அரசு பள்ளி அருகே வந்த போது அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்த்தில் ராஜேந்திரன், தேவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பேருந்துடன் சரணடைந்தார்.
இந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“