கோவை ஆலந்துறை அடுத்த சாடிவயல் சிறுவாணி அடிவார மலைப்பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவியில் குளித்து மகிழ தமிழக மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் உள்ளுர் மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
Advertisment
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கனமழை காரணமாக, அருவியில் நீர்வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குற்றால அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில் குற்றால அருவியில் நீர்வரத்து குறைவாகவும், குளிப்பதற்கு ஏதுவாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் மீண்டும் அனுமதி அளித்தனர். இருந்த போதிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அட்டவணையின்படி அனுமதி வழங்கப்படுகிறது
SLOT 1 - 10.00 am to 11.00 am
SLOT 2 - 11.30 am to 12.30 pm
SLOT 3 - 1.00 pm to 2.00 pm
மேற்கண்ட கால அட்டவணையில் SLOT 1"யில் அனுமதிச் சீட்டு பெற்று செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம் ஒரு மணிக்குள் நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“