கோவையில் கடந்த 23 ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் வெடித்த சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து NIA அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisment
இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். கோட்டை ஈஸ்வரன் சுவாமியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாஜக, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து கட்சியினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது;
Advertisment
Advertisements
கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோட்டை ஈஸ்வரன், முருகனுக்கு நன்றி கடன் செலுத்தினேன். 1998 குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக தொழிலதிபர்கள் கோவையை முன்னெடுத்து செல்கின்றனர். இந்த நேரத்தில் இந்த தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் கோவை மாவட்டம் இன்னும் 20 வருடங்கள் பின்னோக்கி சென்றிருக்கும்.
அதனை தடுத்து நிறுத்திய கோவை மாநகர காவல் துறையினருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை கூறினார்..
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை
கோவையில் உள்ள மக்கள், வன்முறையை கையில் எடுக்கக் கூடாது வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள்.
மேலும் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட சில பொருட்கள் என சிலவற்றை (கோலிகுண்டு, ஆணி) காண்பித்தார்.
இன்னும் காவல்துறையினர் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதற்கு என்ன காரணம், அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். ஐ எஸ்.ஐ.எஸ் என்பது தவறான ஐடியாலஜி என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள். எனவே அவர்களை விடக்கூடாது.
மத்திய அரசு ஏற்கனே ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த கூடும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவத்தை வைத்து அரசியல் செய்யவோ அல்லது பலனடையவோ பாஜக கட்சி விரும்பாது.
NIA இதனை டெரர் அட்டாக் என தற்போது கூற வேண்டிய அவசியம் இல்லை ஆனால் தமிழக அரசு ஏன் டெரர் அட்டாக் என குறிப்பிடவில்லை. பந்த் அறிவிப்பை பொறுத்தவரை கட்சியின் அலுவலகத்தில் இருந்து கூறினால் தலைவர் பொறுப்பாக முடியும், ஆனால் இது மாவட்ட நிர்வாகிகள் சில அமைப்புகள் முடிவெடுத்தது என தெரிவித்தார். 2022ல் 14 போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம் அதே சமயம் எங்களுடைய அனுமதியின்றியும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.
மேலும் நான் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்கிறேன் என சொல்ல கூடாது, வரம்பு மீறும் போது, எப்படி செய்தியாளர்கள் தங்கள் மீது கோபம் கொள்கிறீர்களோ, அதேபோல் சில செய்தி ஊடகங்கள் குறி வைத்து ஒரே கேள்வியை கேட்டால் கோபம் வருவது சகஜம் தானே என கூறினார்.
பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று சொல்லவில்லை குரங்கு போல் தாவி தாவி வந்து என்னை பேச விடாமல் பேட்டி எடுக்கிறீர்கள்? என்று நான் கூறியது இரண்டும் வேறு என தெரிவித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கும் அண்ணாமலைக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அது குறித்து நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“