/indian-express-tamil/media/media_files/32dYRrusogikCLDTfVhz.jpeg)
Coimbatore Day
பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை, ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 219 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது.அதையொட்டி, கடந்த பத்து ஆண்டுகளாக நவம்பர் 24-ம் தேதியை கோயமுத்தூர் தினமாக கோவை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது கோவை மாவட்டம் தலை சிறந்த நகரங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.
கோவை பஞ்சாலைகளுக்கு புகழ்பெற்ற நகரம். இங்கே உருவான முதல் பஞ்சாலை ‘கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் (சி.எஸ்.டபிள்யூ). இதை உருவாக்கியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர்.
தற்போது கல்வி நகராகவும், மருத்துவ நகரமாகவும், தொழில் நகராகவும் திகழ்ந்து வருகிறது. நூற்றுக்கணக்கான தொழில் வளங்களுடன், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என புகழப்படும் சிறுவாணி அணை, கோவை மக்களின் குடிநீர் ஆதாரம் ஆகும்.
இங்கு நிலவும் இதமான வானிலை, தொழில் வாய்ப்புகள் கோவைக்கு வந்தோரை வளமாக வாழ வைத்து வருகிறது.
ஹாப்பி பர்த்டே கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.