செந்தில் பாலாஜிக்கு பதிலாக முத்துசாமி: கோவை பொறுப்பு அமைச்சராக நியமனம்

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore Development Projects Minister Muthusamy senthil balaji Tamil News

அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்துவந்த டாஸ்மாக் நிர்வாக பணிகளை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்துவந்த இலாகாக்கள் பிற அமைச்சர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர், முத்துசாமி, அனைத்து துறை சார்ந்த அலுவர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்று அடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனையை வழங்குவார் என தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

publive-image

ஏற்கெனவே அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்துவந்த டாஸ்மாக் நிர்வாக பணிகளை அமைச்சர் முத்துசாமிக்கு கொடுத்த நிலையில், தற்போது, கோவை பொறுப்பு அமைச்சர் பதவியும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பித்தக்கது.

Advertisment
Advertisements

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk V Senthil Balaji Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: