கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7 தேதி தனது முகாம் அலுவலகத்தில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அருகில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சில யூடியூப் சேனல்கள் மற்றும் தனிநபர்கள் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தனர். இப்படி சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நேற்று சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் வராகி, 'பேசு தமிழா பேசு' யூடியூப் சேனல் நிர்வாகி ராஜவேல் நாகராஜன் ஆகியோர், கோவை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர்.
அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் அந்த கருத்துகள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை உங்களுக்கு தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளர் கரிகால் பாரிசங்கர் மற்றும் ஆய்வாளர் செந்தில்நாதன் தலைமையில் பேசு தமிழா பேசு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கிரண் ஸ்ரீவத்சன், ஜகதீசன் ஆகியோரிடம் சுமார் 40 நிமிடத்திற்கு மேல் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil