உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான அக்டோபர் மாதத்தை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை அண்டு ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் கார்ட்டூன் வீடியோக்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் குகன் இதுகுறித்து கூறியதாவது, "மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலையில் பெண்கள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களை குணப்படுத்த முடியும். இதனால் தான் மார்பக புற்றுநோய்க் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.
இதில் இந்தியாவில் முதல் முறையாக மார்பக புற்றுநோய்க்கான க்யூ.ஆர் கோர்டுடன் கூடிய அனிமேஷன் கார்ட்டூன் வாயிலான விழிப்புணர்வு வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
இந்த விழிப்புணர்வு வீடியோக்களை க்யூ.ஆர்.கோர்டை ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/iGxhSDHd6HAvIKVQb1wg.jpeg)
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்தியேக வீடியோக்களில் மார்பக புற்றுநோய் குறித்த கண்ணோட்டம், மார்பக புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங், சிகிச்சை மற்றும் சிகிச்சைகளின் பக்க விளைவுகள், கர்ப்ப காலத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கிய தகவல்கள் உள்ளன.
மேலும் இந்த வீடியோக்களின் ஒரு பிரிவில் ஆண்களிடத்தில் ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு செய்திகள் இடம் பெற்றுள்ளன. இந்த மாதம் முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனைத்து பணி நாட்களிலும் காலை 9 மணி முதல் 5 மணி வரை பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/RD2DCEh777jtqCjzf7Oe.jpeg)
தேவைப்படும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனையும் வழங்கப்பட இருக்கிறது என டாக்டர் குகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் டீன் டாக்டர் ராஜகோபால், அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு வீடியோக்களை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் சி.ஓ.ஓ. சுவாதி ரோஹித் பங்கேற்று அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயண சுவாமி முன்னிலையில் வெளியிட்டார்.
/indian-express-tamil/media/media_files/jyHczl5SlccFe3kjluoI.jpeg)
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“