Advertisment

கனமழை முன்னெச்சரிக்கை: கோவை மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களின் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாவே, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore District Administration Important announcement for Heavy Rain Tamil News

பொதுமக்கள் உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும்,மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

Advertisment

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 

கோயம்புத்தூர் மலவட்டத்தில் 01.12.2024 முதல் 03.12.2024 வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 1077 மற்றும் 0422-2306051 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422-2302323 மற்றும் வாட்ஸ் அப் எண்:-81900-00200 பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் சொல்வதை தவிர்த்து வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களின் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாவே, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறு அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

விளம்பரப்போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப்போர்டுகள் உறுதிபடுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் நீர்நிலைகளில் துணி துவைக்கலோ.குளிக்கலோ,நீந்தவே மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் செல்பி (Selfie) எடுக்க செல்வாதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆற்றங்கரைகள் மற்றும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுருத்தப்படுகிறது.

பொதுமக்கள் உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும்,மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக கையாளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு அருகில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளின் தண்ணீர் சூழ்ந்திருப்பின் நிவாரண முகாம்களில் தங்க விரும்பும் பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தரைப்பாலங்களில் வெள்ளநீர் செல்லும்போது அதன் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.போக்குவரத்து அறிவிப்பு பலகைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு அணைக்கட்டு பகுதிகளுக்கும். நீர்வீழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment