கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து கோவை ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக ஆனைக்கட்டி அழைத்துச் சென்றனர்.
/indian-express-tamil/media/media_files/8eeCkQkNFvpqbu7ZYGIE.jpeg)
/indian-express-tamil/media/media_files/XFBfaWzTkAtyPjQpvxpe.jpeg)
இதற்கான வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுற்றுலா செல்வோர்க்கு தேவையான சிற்றுண்டிகளை வழங்கினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“