கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் அவிநாசி மேம்பாலம், வஉசி பூங்கா ஆகிய பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்காக புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கால்வாய் அமைக்கும் பணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தனர்
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூறியதாவது:-
கோவை மாநகர் பகுதியில் மழை நீர் தேங்குது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதை அருகே ஏற்கனவே கிரில் அமைத்து மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசி சுரங்கப்பாதை, சிவானந்தா காலனி ஏஆர்சி சுரங்கப்பாதை மழைநீர் தேங்காதவாறும், செம்மொழி பூங்கா ஆகிய பகுதியில் வரும் மழைநீர்களை தடுப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது
அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை இந்த கால்வாய் மூலம் வெளியேற்ற போகிறோம். மேலும் ஏஆர்சி மேம்பாலத்தின் உள்ள சாலையின் கீழே இது போல வாய்க்கால் அமைத்து மழைநீர் தேங்காதவாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியானது 15 நாட்களுக்கு நடைபெறும் ஆனால் தற்பொழுது மழை காலம் என்பதால் இரவு முழுவதும் இந்த பணி நடைபெற்று வருகிறது. அடுத்து ஆண்டு வரும் பருவமழை போது எந்தவிதமான பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
சாக்கடை கால்வாய்களை பல்வேறு பகுதியில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில இடங்களில் திறந்து இருப்பதால் அந்த பகுதியில் மட்டும் அடைப்பு ஏற்படும். கால்வாய் பகுதி மற்றும் குளங்களில் இருந்து தூர்வாரப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மழை அதிகரித்தால் குடியிருப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்குவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் 76 மையங்களும், புறநகர் பகுதியில் 66 மையங்களும் தயார் நிலையில் இருக்கிறது. பொதுமக்கள் தங்கும் போது அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி ஏற்பாடு செய்யபடும். மழைநீர் நொய்யல் ஆற்றில் உள்ளே செல்லும் பாதை, வெளியேறும் பாதையை ஆராய்ந்து அந்த பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 24 மணி நேரம் வாகன வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தேவைக்கு ஏற்ப அதனை பயன்படுத்துவோம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“