கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது.
இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் துணிகளை கொண்டும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு மின்மாற்றியில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“