Advertisment

வாக்கு சேகரிக்க வரும் போது 10 ஆண்டுகளில் பா.ஜ.க. என்ன செய்தது என கேளுங்கள்- கோவை தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கடந்த 10 ஆண்டுகளாக இங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி நமக்கு என்ன கொடுத்தது? விலை உயர்வு, கேஸ் விலை, பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா கூட்டணி கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று காலை மணியகாரம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட காந்திமாநகரில் பிரச்சாரத்தை துவக்கினார்.

Advertisment

வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார் - அப்பகுதியில் தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வருவதாகவும், இலவச பேருந்து பயணத்தால் பேருந்து கட்டணத்தை சேமிப்பதாகவும் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு தேவையானவைகளை  வழங்கி வருவதுடன் தகுந்த பாதுகாப்பை அளித்து வருகின்றார்.

எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு தான் என வேட்பாளரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில், இந்த தேர்தலை பொறுத்தவரையில் ஒரு முக்கியமான தேர்தல். இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு தொகுதியாக நமது கோவை பாராளுமன்ற தொகுதி அமைந்திருக்கிறது.

திமுக, செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது.

பல இடர்பாடுகளுக்கு நடுவே நிதி நெருக்கடியின் நடுவே பல சிறந்த திட்டங்களை மகளிருக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரே அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம்.

அதனால் தான் இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. 

உங்களிடத்திலே எதிரணி கட்சியினர், வேட்பாளர்கள் வருவார்கள்.

Coimbatore

கடந்த 10 ஆண்டுகளாக இங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி நமக்கு என்ன கொடுத்தது? விலை உயர்வு, கேஸ் விலை, பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது .

உங்கள் அனைவருக்கும் இது தெரியும். இப்படி இருக்க அவர்கள் ஏதோ நிறைய செய்தது போல உங்களிடத்திலே வந்து வாக்கு கேட்பார்கள். ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் அளிப்பேன் என்று பிரதம மந்திரி வாக்குறுதி கொடுத்தார். அது என்ன ஆயிற்று என்று நீங்கள் கேட்க வேண்டும்.

Coimbatore

அதேபோல அண்ணா திமுகவை பொறுத்த வரைக்கும், அவர்களுக்கு பிரதம மந்திரி வேட்பாளர் என்பது கிடையாது. இப்பொழுது பிஜேபி"யும் அவர்களும் தனியாக இருக்கிற மாதிரி தெரியும். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் சேர்ந்து கொள்வார்கள். வரக்கூடிய காலகட்டத்தில் இந்த விலைவாசி உயர்வை தடுத்திட, இந்த ஜிஎஸ்டி பிரச்சனைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல பாராளுமன்றத்தில் இந்த தொகுதியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

அதனால் தான் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு பெருவாரியான ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என இவ்வாறு பேசினார்.

இதேபோல காமராஜபுரத்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகுடபதி, இளைஞரணி அஸ்வின் ஆகியோர் இணைந்து 18 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மாலையை, கிரேன் உதவியுடன் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு அணிவித்தனர்.

 

மகளிர் அணி அமைப்பாளர் அண்ணம்மாள் புல்லட் ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார்.

Coimbatore

இந்த வாக்கு சேகரிப்பின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex mla, மதிமுக மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ்,  ஆர்ஆர்.மோகன்குமார், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார், வீணஸ் மணி, பகுதிக் கழக செயலாளர் மார்க்கெட் மனோகரன், வட்டச்செயலாளர்கள் சுரேஷ்நாராயணன், வழக்கறிஞர் சிவக்குமார், உக்கடம் ஆனந்த், மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் (காங்கிரஸ்), ஷர்மிளா சுரேஷ் நாராயணன், சங்கர் மற்றும் சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால்  உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment