/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-01T113532.729.jpg)
coimbatore dmk district secretary thendral selvaraj arrested, kovai district dmk secretary arrested, கோவை திமுக மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் கைது, தென்றல் செல்வராஜ் கைது, திமுக, கோவை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, dmk thendral selvaraj arrested for derogatory speech video, thendral selvaraj derogarory speech on minister sp velumani, dmk, aiadmk, pollachi
அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அளித்த புகாரின் பேரில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் போலீசார் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையின் புதூர் வழியாக கருங்கல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதனை அறிந்த கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் பொதுமக்களுடன் இணைந்து லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
கொரோனா பொது முடக்க காலத்தில், சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்ததாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மீதும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி அவதூறு வீடியோ பதிவேற்றம் செய்ததாக செல்வராஜின் உதவியாளர் கீர்த்திஆனந்த் மீதும் அதிமுக எம்.எல்.ஏ சண்முகம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர் கீர்த்திஆனந்த் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர், பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர்.
கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை குறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான கார்த்திக் கூறுகையில், “தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல், என் மீதும்,கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கைது அச்சுறுத்தலுக்கு எல்லாம், திமுக ஒருபோதும் அஞ்சாது. கோவையில் அதிமுகவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.