/indian-express-tamil/media/media_files/WwFtqdFFZRND2WxMiHhp.jpg)
இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பாலமலை கிராமத்தில் இன்று (மார்ச் 30) தி.மு.கவினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மாநில மாணவரணி தலைவரும் கவுண்டம்பாளையம் பொறுப்பாளருமான இரா.ராஜீவ் காந்தி,மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி உள்ளிட்டோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலைவாழ் மக்களுடன் சேர்ந்து அவர்கள் பாரம்பரிய நடனம் ஆடியும், மேளதாளம் முழங்கியும் இந்தியா கூட்டணியின் கோயம்புத்தூர் பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
கோவையில் மலைவாழ் மக்களுடன் பாரம்பரிய நடனம் ஆடி தி.மு.கவினர் வாக்குச் சேகரிப்பு #Coimbatore | #DMKpic.twitter.com/rWywKt9D1e
— Indian Express Tamil (@IeTamil) March 30, 2024
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.