தி.மு.க துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன்பின்னர், அவிநாசியில் இருந்து விமான நிலையம் வந்து கொண்டிருந்தார். அவருடன் தி.மு.க மருத்துவரணி மாநில நிர்வாகி கோகுல் கிருபா சங்கர் உள்ளிட்டவர்கள் பயணித்தனர்.
கனியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் ராசாவின் காரில் பயணித்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தவரை பார்த்தார். உடனடியாக வாகனத்தை நிறுத்திய அவர் காலம் தாழ்த்தாமல் படுகாயமடைந்த இளைஞரை தூக்கி தனது காரில் அவசர சிகிச்சைக்காக கோவை ராயல்கேர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மயக்கமுற்ற அந்த இளைஞரை உடன் இருந்து சிறப்பு சிகிச்சையளிக்க, தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் அவர்களையும் அனுப்பி வைத்ததார். இளைஞருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
தனியார் நிறுவன ஊழியரான தமிழ் செல்வன் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கிறார். லாரி ஒன்றில் மீது எதிர்பாராத விதமாக மோதியதால் இந்த சாலை விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கழுத்து, கைகளில் காயமடைந்த அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil