/indian-express-tamil/media/media_files/2025/09/19/coimbatore-dmk-poster-about-edappadi-k-palaniswami-delhi-visit-tamil-news-2025-09-19-14-42-41.jpg)
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் குறித்து விமர்சனம் செய்து தி.மு.க வினர் ஒட்டிய போஸ்டர்களால் கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரின் அழகை கெடுக்கும் விதமாகவும், மோதலை உருவாக்கும் விதமாகவும் கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் சர்ச்சைக்குரிய சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் போற்றப்பட்டு அரசியல் கட்சியினர் இடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி தாக்குதல் சம்பவங்கள் மட்டுமின்றி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில், இதனை கருத்தில் கொண்ட மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் மோதல்களை தடுக்கும் விதமாக இது போன்ற போஸ்டர்கள் மற்றும் மாநகரில் ஒட்டக் கூடாது என்றும், இதனை தடுக்கும் விதமாக மேம்பால சுவர்களில் கோவையின் அடையாளங்கள், விழிப்புணர்வு படங்கள் மற்றும் இயற்கை, சுற்றுச்சூழல் போன்றவற்றை மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மேம்பால தூண்கள் சுவர்களில் வரைந்து கோவையில் அழகை மேம்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், மீண்டும் அரசியல் கட்சியினர் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஓட்டப்பட்டு வரும் சுவரொட்டிகளால் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு நிலவுகிறது. மேலும் நேற்று இரவு இதுக்கே பயந்தா எப்டி ? இனி தான் ஆரம்பம் என்று வாசகங்களுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் டெல்லி பயணம் குறித்து விமர்சிக்கும் விதமாக போஸ்டர்கள் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தி.மு.கவின் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மசூது சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி தி.மு.க வினர் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் அரசியல் கட்சியினர் இடையே மோதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அதிகாரிகளும் காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதுகாக்கப்படும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.