Advertisment

நண்பன் துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது சோகம்; இறந்தும் கண் தானம் செய்த இளம் மருத்துவர்

பாலாஜி சரவணன் ரஷ்யாவில் 6 ஆண்டுகள் மருத்துவ படிப்பை படித்துவிட்டு இந்தியா வந்து 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்றார்

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore doctor eye donation

பொள்ளாச்சியில் வெங்கட்ரமண வீதியில் வசித்து வருபவர் முரளி என்கிற பழனிக்குமார் (55). இவர் அதிமுக கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி பொருளாளராகவும் உள்ளார்.

Advertisment

இவருக்கு வசந்தி (46) மனைவியும் பாலாஜி நாராயணன் (25) என்ற மகனும் ,மைதிலி  (23) என்ற மகளும் உள்ளார்.

இதில் பாலாஜி சரவணன் ரஷ்யாவில் 6 ஆண்டுகள் மருத்துவ படிப்பை படித்துவிட்டு இந்தியா வந்து 2020-ம் ஆண்டு டெல்லியில் FMGE தேர்வு எழுதி மருத்துவராக தேர்ச்சி பெற்றார். கொரோனா காலங்களில் திருப்பூர், ஈரோடு பகுதிகளில் கொரோனா பாதித்த  நபர்களுக்கு டாக்டர் பாலாஜி நாராயண மருத்துவ சேவை புரிந்துள்ளார்.

அண்மையில் கோவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார்.

இந்நிலையில் டாக்டர் பாலாஜி நாராயணன் பொள்ளாச்சி வெங்கட்ரமண வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து, கடந்த ஒன்றரை மாதங்களாக மருத்துவ மேற்படிப்புக்காக படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் பாலாஜி உடன் மருத்துவ படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த திலீப் என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவரது 30-வது நாள் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள டாக்டர் பாலாஜி நாராயணன் கடந்த 26 ஆம் தேதி பொள்ளாச்சியில் இருந்து தனியார் பஸ் மூலம் சென்னை பல்லாவரம் சென்றார். அங்கு துக்க நிகழ்வை முடித்துவிட்டு  சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது பெரியப்பா மகன் அசோக் நாராயணன் வீட்டில் பாலாஜி நாராயணன் தங்கினார்.

கடந்த 28 ஆம் தேதி இரவு பொள்ளாச்சி திரும்புவதற்காக தனியார் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்திருந்தார். அன்றிரவு பஸ்சுக்கு செல்வதற்காக வீட்டில் லிப்டில் இருந்து இறங்கி டூவிலரில் ஏறி உட்கார்ந்த போது திடீரென உடல்நிலை சரியில்லை என கூறிய டாக்டர் பாலாஜி நாராயணன்  அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.

அதன் பின்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை கொண்டு சென்று உடலை பரிசோதித்துப் பார்த்தபோது. பாலாஜி நாராயணன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பொள்ளாச்சியில் உள்ள அவரது தந்தை முரளிக்கு தெரியப்படுத்தப்பட்டது தகவலை கேட்ட முரளியின் மனைவி மகள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை விரைந்து அவர்கள் மகன் பாலாஜி நாராயணன் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு பொள்ளாச்சி கொண்டு வந்து பாலாஜி நாராயணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே பாலாஜி நாராயணன் தனது இரண்டு கண்களையும் தானம் செய்திருந்ததால் சென்னையில் உள்ள சங்கர் நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தற்போது பாலாஜி நாராயணன் கருவிழிகள் இரண்டு பேருக்கும், வெள்ளை கண் இரண்டு என நான்கு பேருக்கு பொருத்தப்பட்டு நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment