தொலைவில் இருந்து இதய துடிப்பை கண்காணிக்க புதிய கருவி; கோவை மருத்துவர்கள் சாதனை

பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகளின் இதய துடிப்பை கண்காணிக்க புதிய கருவியைக் கண்டுபிடித்து கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகளின் இதய துடிப்பை கண்காணிக்க புதிய கருவியைக் கண்டுபிடித்து கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore doctors feat, New device to monitor heart rate from several kilometers away, தொலைவில் இருந்து இதய துடிப்பை கண்காணிக்க புதிய கருவி, கோவை மருத்துவர்கள் சாதனை, Coimbatore doctors feat, Coimbatore news, Covai news

பல கி.மீ தொலைவில் இருந்து இதய துடிப்பை கண்காணிக்க புதிய கருவி; கோவை மருத்துவர்கள் சாதனை

பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகளின் இதய துடிப்பை கண்காணிக்க புதிய கருவியைக் கண்டுபிடித்து கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Advertisment

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் "கோட் ப்ளு" எனும் புதிய கருவியை கோவையில் மருத்துவர்கள் செயல்படுத்தி அசத்தி வருகின்றனர்.

பொதுவாக மருத்துவமனையில் இருதய நோயாளிகள், உயர் அறுவை சிகிச்சை நோயாளிகள் என தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவார்கள்.

publive-image
Advertisment
Advertisements

இவர்களை மருத்துவர்கள் 24" மணி நேரமும் கண்காணிப்பது மிகவும் அவசியமாகிறது. அதே போல மருத்துவர்கள் நோயாளிகளின் அருகிலே அமர்ந்து கண்காணிப்பது என்பது கடினமான ஒன்றாகும்.

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் நோயாளிகளை 24"மணி நேரமும் கண்காணிக்கும் விதமாக "கோட் ப்ளு" எனும் புதிய சிப் கருவியை மருத்துவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

publive-image

இந்த சிப் பயோசென்சார் கருவியை நோயாளிகளின் உடலில் பொருத்தி செல்போன் செயலி மூலம் இதயத்துடிப்பை கண்டுபிடிப்பதுடன் நோயாளிகளின் மோசமான நிலையை முன்கூட்டியே மருத்துவர்களுக்கு மெசேஜ் தரக்கூடிய வகையில் ரிமோட் மானிட்டரி சிஸ்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து நோயாளிகளை கண்காணித்து வருவதுடன் மருத்துவமனையிலும் ஒரே இடத்தில் 100"பேரை கண்காணிக்கும் வைரலஸ் கமாண்ட் சென்டர் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் குழு கண்காணித்து அசத்தி வருகின்றனர்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: