Advertisment

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: தி.மு.க அரசு மீது வானதி சீனிவாசன் கடும் சாடல்

'போதைப் பொருள் விற்பனையில் தி.மு.க தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடான ஆட்சியை கொடுத்துக் கொண்டு இருக்கிறது' என்று கோவை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Drug usage in TN BJP MLA Vanathi Srinivasan slams DMK government Tamil News

"தி.மு.க இதுவரைக்கும் இருந்த கூட்டணியில் இடம் கொடுப்பதற்கு இழுபறியாக உள்ளது." என்று வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

BJP MLA Vanathi Srinivasan | Dmk: இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 83 வது வார்டு காட்டூர், 70 வார்டு தெப்பக்குளம் மைதானம் மற்றும் 68 வார்டு சிவானந்தா காலனி ஆகிய மூன்று பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

Advertisment

இதில், அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரம் விநியோகம் செய்யப்படும் ஏ.டி.எம் குடிநீர் இயந்திரத்தை பொதுமக்களுக்கு திறந்து வைத்தார் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும் எம்.எல்.ஏ-வுமான வானதி ஸ்ரீனிவாசன். 

இதன்பின்னர், வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கூடிய எந்திரங்களை நிறுவிக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு வாட்டர் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையிலும், தற்பொழுது வரை கோவை தெற்கு தொகுதியில் 9வது இயந்திரத்தை அமைத்துள்ளோம். இதன் வாயிலாக ஒவ்வொரு குடும்பமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீரை அவர்கள் எலக்ட்ரானிக் கார்டு மூலம் எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இந்தக் கார்டுகள் வழங்கி வருகிறோம். 

இந்த எந்திரத்தில் கூடுதல் வசதியாக கார்டு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு பட்டனை அழுத்தினால் உடனடி தேவைக்காக ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார்டு இல்லாமல் சாதாரண மக்கள் பயன் பெறும் வகையில் தாகத்தை தணிக்க இந்த வசதியை முதல் முறையாக இந்த எந்திரத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். அதனால் இந்த பகுதி மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எங்களது விருப்பம். 

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நேற்று ஒரே நாளில் மூன்று அங்கன்வாடி மையங்கள் திறந்து வைத்துள்ளோம். மேலும் 3 அங்கன்வாடி மையங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். இதுவரை குழந்தைகள் பெண்களுக்கு உதவும் வகையில் 9 அங்கன்வாடி மையங்களால் கோவை தெற்கு தொகுதியில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உள்ளோம். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மட்டுமல்லாமல் தனியாரிடம் இருந்தும் உதவிகள் பெறப்பட்டு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு உள்ளது, இன்று காட்டூர் பகுதியில் அமைத்துள்ளோம்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டு உள்ளது. இந்தியா முழுவதும் மற்ற அரசியல் கட்சிகள் களத்திற்கு வரும் முன்பாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை 195 இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டோம். தமிழகத்தில் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பணிகள் வேகம் எடுத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணி குழுக்கள் நியமிக்கப்பட்டு, முழு வீச்சில் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராகிக் கொண்டு உள்ளது.

வெகு நிச்சயமாக இந்த முறை தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி கனிகளை குவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இப்போது இருக்கின்ற தேர்தலில் முக்கியமான கேள்வி என்பது யார் இந்த நாட்டினுடைய அடுத்த பிரதமர் என்பது தான் அடுத்த பிரதமராக பத்தாண்டுகளாக நாட்டை உயர்த்தி கொண்டு, முன்னேற்றிக் கொண்டு உள்ள பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறை பிரதமர் ஆக வேண்டும் என்பது தான் இந்த தேர்தல். அதனால் தமிழகத்தின் உடைய தேர்தல் களத்திலே நாங்கள் வைப்பது ஒரே ஒரு கேள்வி தான் இந்த நாட்டினுடைய பிரதமராக யார் வர வேண்டும் அதற்கு வாக்களியுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்ற பிரதமருக்கு சரி சமமாக ஒரு வேட்பாளர் கூட இந்த நாட்டிலே கிடையாது, அப்படி இருக்கின்ற சூழலில் தமிழகம் தேசியத்தின் பக்கம் திரும்புவதற்கான ஒரு நல்ல சூழல் உருவாகி கொண்டுள்ளது. 

இந்தத் தேர்தலில் எங்களுடைய பணிகளும் பல மடங்கு அதிகரிக்கும். ஏனென்றால் கட்சியினுடைய உறுப்பினர்களும் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளது. வெகு நிச்சயமாக பிரதமருடைய வெற்றியை அவரிடம் கொடுக்க வேண்டும்  என்பதில் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம். 

கூட்டணி பேச்சுவார்த்தை என்பதை பொறுத்த வரைக்கும் அகில இந்திய அளவிலே இருக்கின்ற சூழல் தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற வரையிலும் கூட கூட்டணிகள் வருவார்கள், இதற்கு முன்பும் அதனை பார்த்துள்ளோம். இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு கட்சிகள் வந்துள்ளன. டெல்லியில் ஒவ்வொரு நாளும் புதுக் கட்சிகள் வந்து கொண்டுள்ளது. தேர்தல் நெருங்குகின்ற போது ஒரு பிரம்மாண்டமான சேனையுடன் இருப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தி.மு.க இதுவரைக்கும் இருந்த கூட்டணியில் இடம் கொடுப்பதற்கு இழுபறியாக உள்ளது. 

குழந்தைகளை கெடுக்க கூடிய போதை பொருள்களின் நடமாட்டத்தை ஆளுங்கட்சியின் ஆதரவோடு இருக்கும் நபர்கள் செய்யும்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்கனவே பெண்களின் ஆதரவு பெரிதாக கிடையாது. இப்படி இருக்கின்ற நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடாமல், குழந்தைகளுக்கு போதை பொருள் விற்கின்ற நபர்களையும் உடன் வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் தொடர்பு வைத்து உள்ளவர்களை உடன் வைத்து உள்ளது. இவ்வளவு செல்வாக்குடன் அந்த நபரை வைத்து உள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடான ஆட்சியை கொடுத்துக் கொண்டு உள்ளது. இன்று பொதுமக்கள் பார்த்துக் கொண்டுள்ளது. 

பாண்டிச்சேரியில் ஒன்பது வயது குழந்தைக்கு நடந்த கொடூரம் மனதை உலுக்குகின்ற சம்பவம். போதைப் பொருள் எதிரான செயல்களை முன் எடுத்து கொண்டு உள்ள நிலையில் இது போன்று பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக சிதைக்கின்ற போது ஒட்டுமொத்த சமூகத்தையும் மனதை உலுக்கின்ற நிகழ்வாக உள்ளது. அந்த நிகழ்வை பொறுத்த வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதற்காக அங்கு இருக்கின்ற அரசும் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறோம். எந்த காரணத்தைக் கொண்டும் இது மாதிரியான சமூகத்தில் மன வியாதி கொண்ட நண்பர்களை போதைப் பொருள் ஊக்குவிக்கின்றது, என்பதால் தான் அதற்கு எதிராக நிற்கிறோம். பா.ஜ.க இளைஞரணி சார்பாக கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு முன்பாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை வரும் திங்கள் முதல் ஆரம்பிக்க  உள்ளோம்." என்று அவர் கூறினார். 

நீங்கள் நலமா ? என்ற கேள்வியுடன் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வது குறித்தான கேள்விக்கு, "அதுதான் நாங்கள் அனைவரும் நல்லா இல்லை... நல்லா இல்லை... என்று மக்களும் கூறுவதாகவும், அரசியல் கட்சிகள் கூறவில்லை என்றும் சாதாரண மக்கள் கூறுவதாகவும் அவர் கூறினார்.

கோவையில் குப்பைகளை அகற்றாமல், டாஸ்மார்க் கடைகளை முக்கிய பகுதிகளில் திறந்து வைப்பதாகவும், மின்சார கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாகவும், சொத்து வரி உயர்வு, பத்திரப் பதிவு உயர்வு, அனைத்து துறைகளையும் விட்டு வைக்காமல் நீங்கள் நலமா ? என்றால் முதல்வரின் குடும்பம் மட்டுமே நலமாக உள்ளதாக குற்றம் சாட்டினார். அது தாண்டி தமிழகத்தில் ஒருவரும் நன்றாக இல்லை என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment