Advertisment

வேலுமணி வீட்டில் ரெய்டு: 7 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்- தொண்டர்கள் குண்டுக்கட்டாக கைது

Tamilnadu: DVAC Raids AIADMK Ex-Minister SP Velumani's house Tamil News: எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் - தொண்டர்கள் குண்டுக்கட்டாக கைது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: DVAC Raids AIADMK Ex-Minister SP Velumani's house; 7 MLA’s and cadre got arrested

VAC Raids AIADMK Ex-Minister SP Velumani's house; 7 MLA’s and cadre got arrested (photo credit - rahman)

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வீட்டின் முன்பு கூடியிருந்த கோவை மாவட்ட 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கே ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி,விபி கந்தசாமி, ஏகே செல்வராஜ் உட்பட 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

கைது செய்யும் போது போலீஸாருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நிலவியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Nadu Aiadmk Admk Sp Velumani Coimbatore Minister Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment