குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசு சான்றிதழ் என்பது கட்டாயமாக உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகள் முதல் அரசு நலத்திட்டங்கள் பெறுவது வரை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, வாரிசு சான்று, குடும்ப அட்டை என ஒவ்வொன்றும் முக்கியமாக உள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த அரசு சான்றிதழ்கள் பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பலருக்கும் குறிப்பிட்ட நாட்களில் சான்றிதழ் கிடைப்பதில்லை.
இந்த சான்றிதழ்களை பெற அரசு அதிகாரிகளை நேரடியாக சந்திக்க சென்றாலும் தேர்தல் பணிகளுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு,அரசு நலத்திட்டங்கள் பெற மற்றும் இதர பணிகளுக்கென புதிய சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஆவதால், கோவை மாவட்டதில் உள்ள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சான்றிதழ்களை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“