New Update
/
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜுன் 5) நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை தி.மு.க கூட்டணி 39 தொகுதிகளிலும், பா.ஜ.க 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அ.தி.மு.கவில் விருதுநகரில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க இழுபறியாக உள்ளது. இந்நிலையில் ஸ்டார் வேட்பாளர்கள் உள்ள கோவை மக்களவைத் தொகுதி மிகுந்த கவனம் பெற்றது.
தற்போது தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆரம்பம் முதல் களநிலவரம் மாறி மாறி இருந்தது. கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான கோவையில் அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கு இப்போது தி.மு.க-பா.ஜ.க என களம் மாறியுள்ளது.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜ.க மாநிலத் தலைவர், வேட்பாளருமான அண்ணாமலை முன்னிலை பெற்றார். தொடர்ந்து அவர் முன்னிலை வகித்த நிலையில் சில நேரங்களில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெறத் தொடங்கினார்.
முதல் சுற்று முடிவில் திமுக 27,269 வாக்குகளும், பா.ஜ.க 19,869 வாக்குகளும், அ.தி.மு.க 12,871 வாக்குகளும் பெற்றன. காலை 10:12 மணி நிலவரப்படி, கணபதி ராஜ்குமார் 45,536 வாக்குகள், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 29, 877 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க-வின் சிங்கை ராமச்சந்திரன் 20, 853 வாக்குகள் பெற்றார்.
சுற்றுகள் | அண்ணாமலை | சிங்கை ராமச்சந்திரன் |
2 | 21,298 வாக்குகள் | 10,525 வாக்குகள் |
3 | 61,035 | 33,883 |
5-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஐந்து சுற்றுகள் முடிவில் திமுக 1,27,784 வாக்குகளும், பாஜக 1,02,784 வாக்குகளும், அதிமுக 53,811 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 18,380 வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9-வது சுற்று முடிவில் திமுக 226510, பாஜக 180941, அதிமுக 96369, நாம் தமிழர் 32396. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 45,569 வாக்குகள் முன்னிலை.
11-வது சுற்று முடிவு படி, திமுக 276989, பாஜக 224185, அதிமுக 115415, நாம் தமிழர் 36050 வாக்குகள் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 52,804 வாக்குகள் முன்னிலை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.