'விநாயகா, கணேசா காப்பாத்துங்க..'; மூதாட்டியை தாக்க வந்த காட்டு யானை: சி.சி.டி.வி காட்சி வைரல்

மலைகள் அருகே உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, வீடுகளில் உள்ள அரிசி பருப்புகளை தின்று சேதப்படுத்தி வருகிறது.

மலைகள் அருகே உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, வீடுகளில் உள்ள அரிசி பருப்புகளை தின்று சேதப்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
Cbe ele atta.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை, பேரூர் அருகே மாதம்பட்டி கிராமம் உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. இங்கு வன விலங்குகள், யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள், தண்ணீர், உணவு எடுத்துக் கொண்டு அதிகாலை அடர் வனத்தை நோக்கி சென்று விடும்.  கோடை காலம் ஆரம்பித்த நிலையில் யானைகள் நீர், உணவுக்காக ஊர் பகுதிகளுக்கு அதிக அளவில் வர துவங்கி உள்ளது. 

Advertisment

மலைகள் அருகே உள்ள கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, வீடுகளில் உள்ள அரிசி பருப்புகளை தின்று சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு பேரூர் மாதம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் அருகே வந்த காட்டு யானை மூதாட்டியை தாக்கி தள்ளி விடுகின்ற சி.சி.டி.வி காட்சிகளும் பதிவாகி உள்ளது. மேலும் அந்த மூதாட்டி விநாயகா, கணேசா காப்பாற்றுங்கள் என்று கூச்சல் இடுகிறார்.  

Advertisment
Advertisements

சத்தம் கேட்டு அந்த காட்டு யானை அவரை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து சென்று விடுகிறது. இந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி அப்பகுதியில் வைரலாகி வருகிறது.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    Coimbatore

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: