coimbatore elephant death : கோவையில் பெண் யானை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் அடிக்கடி யானை இறப்பு குறித்த செய்திகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. சமீபத்தில் கேரளாவில் கர்பமான யானை பழத்தில் வெடித்து வைத்துக் கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கோயம்புத்தூரில் கடந்த 2 நாளில் 2 யானைகள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட, சுண்டப்பட்டி ஐடிசி பம்ப் ஹவுஸ் அருகே பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை பார்த்தது அதிர்ச்சி அடைந்தது. பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.
2020 பேரழிவின் காலம் தான் ; நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் மரணம்!
இதுத்தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை சகோதரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கள் தோட்டத்திற்குள் யானை புக முயன்றதால் சுட்டுக் கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த இருவரிடமிருந்தும் ஒரு நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்து. பெண் யானையின் இடது காது அருகே துளைத்துக்கொண்டு மூளை வரை இரும்புக் குண்டு சென்றதால் யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
உயிரிழந்த பெண் யானைக்குப் பிறந்த குட்டி ஒன்று தற்போது சில பெண் யானைகள் கூட்டத்துடன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குட்டி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிறுமுகை வனப்பகுதியில், உடல்நலக்குறைவால் மற்றொரு பெண் யானை ஒன்று உயிரிழந்ததுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil