கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனால், கோவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் சிங்காநல்லூர் அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 37 இ-காமர்ஸ் அலுவலகங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கோவையில் பல்வேறு பகுதிகளில் உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்கக் கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.