Coimbatore News : தமிழக வனத்துறை சார்பில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. பறவைகள், பூச்சியினங்கள் ஆகியவற்றின் செரிவை அறிய அடிக்கடி சர்வேக்கள் நடத்தப்படுவது வழக்கம். சமீபத்தில் சத்தியமங்கலம் காடுகளில் பறவைகள் சர்வே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கோவையில் பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் சர்வே நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள சர்வே அறிமுக விழாவில் சிறுவாணி மலைப்பகுதிகளில் இருக்கும் பட்டாம்பூச்சிகள் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை!
கோவை வனத்துறையினருடன், தி நேச்சர் அண்ட் பட்டர்ஃப்ளை சொசைட்டி, WWF, மற்றும் கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி அமைப்புகள் இணைந்து இந்த கணக்கெடுப்பினை நடத்த உள்ளனர். கோவையை சுற்றி அமைந்திருக்கும் இயற்கை எழில் சூழந்த பகுதிகளை இருப்பிடமாக கொண்டுள்ள பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் குறித்து அறிந்து கொள்ள இது பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil