கோவை அருகே தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் குப்பேபாளையம் பகுதியில் தனியார் பாக்குத்தோப்பில் இருந்த குட்டியானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயை பிரிந்து கூட்டத்துடன் சுற்றி வந்த 3 மாத குட்டி யானையை வனத்துறையின் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் கூட்டத்துடன் இருந்த யானை குட்டியை அடையாளம் கண்ட வனத்துறையினர் அதனை பிடித்து தாய் யானையிடன் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர். அருகிலேயே தாய் யானை உள்ளதால் அதனுடன் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தாய் யானையை பிரிந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் பால் கொடுத்துள்ளனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை கிடைத்தவுடன் பிரிந்து தனியாக சுற்றி திரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“