நாம் வடக்கு தெற்கு என பிரிந்துள்ளோம்; கோவையில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி பேச்சு

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என‌ பிரிந்து உள்ளோம். இதனால் பிரதமர் ஒரு குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

Governor RN Ravi
Governor RN Ravi

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜி 20 நாடுகளின் இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு 2023 நடைபெற்று வருகிறது.

இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூண்டுகோல் என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவங்கி வைத்து தலைமை உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஜி 20 மாநாட்டின் தலைவர் (ஷெர்பா)அமிதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசும் பொழுது;  கோவையில் ஜி-20 மாநாடு நடைபெறுவது நமக்கு பெருமை. சொந்த முயற்சியில் நாம் வேக்சின் தயாரித்து உலக நாடுகளுக்கு வேக்ஸின் கொடுத்தோம். அது பிரதமருக்கு பெருமைக்கு உரியுது.

கொரோனா காலத்தில் காஷ்மீர் முதல் அந்தமான் வரை இருக்கும் அனைவருக்கும் கல்வி சென்றடைய இ வித்யா போர்டல் மூலம் கல்வி கொடுத்தோம். இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கு கீழ் உள்ளனர். இங்கு அதிகளவில் இளைஞர்கள் உள்ளனர். இவ்வாறு பேசினார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் தலைமை உரையில் பேசும்போது… தமிழ் கலாச்சாரம் நாகரீகம் ஆகியவை 7000 ஆண்டுகள் பழமையானது. கடலை கூடையில் ஊற்றியது போல் உள்ளது திருக்குறள், அதேபோல் புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், தமிழின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

தற்போது இயற்கை தொடர்பான பிரச்னை, உணவு பஞ்சம், பொருளாதார ரீதியான பாதிப்பு, போர்கள் இருக்கிறது. உலகளவில் ஒரு அமைதியான சூழல் இல்லாத நிலை உள்ளது.

பல நாடுகள் ஆயுதங்களை அழித்து வருகிறது.

எளிமையான, சொகுசான வாழ்வியலுக்கு தொழில்நுட்ப உதவியால் பல சாதனங்கள் பயன்படுத்தி வந்தாலும், நிம்மதி, மகிழ்ச்சி நம்மிடையே இல்லை. வளர்ந்த நாடுகளில் கூட பெண்கள் பாகுபாடு பார்க்கப்படுகிறது.

ஆண், பெண் பாலினம் தொடர்பாக பல பிரச்சினைகள் உள்ளன.  வேளாண்மை துறையில் பாதிப்பு உள்ளது. பல்வேறு நாடுகளில் வறுமை நிலை உள்ளது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மாநாட்டில் தீர்வு காண வேண்டும்.

பிரிட்டிஷ் வெளியேறும் போது நாம் பஞ்சத்தை எதிர்க்கொண்டோம். ஆனால், நம் விஞ்ஞானிகளால் அதனை மிக குறுகிய காலத்திலேயே அந்த பிரச்னை இல்லா நிலையை அடைந்தோம்.

கொரோனா பாதிப்பு காலத்தில் தலைசிறந்த நாடுகள் மருந்துகள், தடுப்பூசிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டன.‌ அந்த நேரத்தில் நம் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த தடுப்பூசியை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டது. இலவசமாக நம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டன.

இந்தியா 200 நாடுகளுக்கும் மேல் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியது.

இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மீகம் பல ஆண்டுகள் பழமையானது.

பாரத நாட்டை பற்றி  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல நாடுகள் ராணுவம் கட்டமைப்பை பலப்படுத்தி பிற நாடுகளை துன்புறுத்தி வருகிறது.‌ ஆனால், நாம் யாரையும் துன்புறுத்துவது இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் டிஎன்ஏ-வில் உள்ளது.  பிரிட்டிஷ் அரசு சென்ற பிறகு நமது பாலிசிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பல முன்னேற்றங்களை அடைந்து உள்ளோம்.

கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களை நம் நாடு சந்தித்துள்ளது

500 மில்லியன் வங்கி கணக்கு திறப்பு, 100 மில்லியன் விவசாயிகளுக்கு நேரடி சலுகை, 30 மில்லியன் மக்களுக்கான வீடுகள் என பல நன்மைகளை கடந்த 9 ஆண்டுகள் இந்தியா சந்தித்துள்ளது.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருந்தாலும் வடக்கு, தெற்கு என‌ பிரிந்து உள்ளோம். இதனால் பிரதமர் ஒரு குடும்பம் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

இந்தியாவில் நீண்ட காலத்திற்கு பிறகு ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளனர்.‌ தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்கள் 50,000 அதிகமாக உள்ளனர்.90 மில்லியன் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளது.

பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.  இது எப்படி நடந்தது என்பதை குறித்து கவனமாக ஆராய வேண்டும். அனைத்து மாணவர்கள், இளைஞர்கள் தங்களுக்குள் உள்ள தொடர்பை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை கவுதமியும் கலந்து கொண்டார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore g 20 conference rn ravi l murugan g 20

Exit mobile version