/indian-express-tamil/media/media_files/d7Kt5peDam5K2Zl4yprO.jpg)
Coimbatore
கோவை திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயுவுடன் நின்றிருந்த 3 லாரிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில், லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு கோவை கணபதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு வந்த லாரி நள்ளிவில் கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
அப்போது கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த சுற்றுச் சுவர் ஒன்று இடிந்து எரிவாயு லோடுடன் இருந்த லாரிகள் மீது விழுந்துள்ளது. இதில் எரிவாயு வால்வுகள் உடைந்து லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து லாரியில் ஏற்பட்ட கசிவை நிறுத்த எரிவாயு நிறுவன ஊழியர்கள் விரைந்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள், சுமார் 4மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அதை சரி செய்தனர்.
கோவை திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயுவுடன் நின்றிருந்த 3 லாரிகள் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்து - லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
— Indian Express Tamil (@IeTamil) December 9, 2023
4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் இணைந்து அதை சரி செய்தனர்#Coimbatorepic.twitter.com/MxwT0mXGX7
இதன் காரணமாக, பாலக்காடு சாலையில் வாகனம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் வேறு பாதையில் மாற்றி விடப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.