Advertisment

தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்… விபத்தில் சிக்கிய கேஸ் டேங்கர் லாரியால் பரபரப்பு!

கோவை - போடிபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: gas tanker lorry hit by truck, road accident Tamil News

டேங்கர் லாரியில் முழுமையாக எரிவாயு லோடு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). இவர் எரிவாயு டேங்கர் லாரி ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து கேரளா மாநிலம் கொச்சின் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றி வருவதற்காக கோவை வழியாக கேரளாவிற்கு சென்றார்.

Advertisment

இன்று காலை சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை கோவை போடிபாளையம் அருகே வந்த போது, எதிரே வேகமாக வேறு வாகனத்தை முந்தி வந்த கார் ஒன்று டேங்கர் லாரியை நோக்கி வந்தது. அப்போது கார் மீது மோதாமல் இருக்க டேங்கர் லாரியை ஓட்டுநர் ராஜேஷ்குமார் வலது புறமாக திருப்பியுள்ளார்.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது. அப்போது டேங்கர் லாரியின் பின்னால் வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் மீது மோதி நின்றது. இதில் டேங்கர் லாரியில் இருந்து இருந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து அங்கு வந்த மதுக்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

லாரி பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது. டேங்கர் லாரியில் முழுமையாக எரிவாயு லோடு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment