கோவை மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பேரிடர் மீட்பு பயிற்சியில் பலியான மாணவி அவர்!
கோவை மாணவி லோகேஸ்வரி, பேரிடர் மேலாண்மை பயிற்சியில் நேற்று பரிதாபமாக பலியானார். கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி மாணவியான அவர், தனது கல்லூரியில் நடந்த மேற்படி பயிற்சியில் கலந்து கொண்டார்.
Tamil Nadu's Coimbatore college girl death incident: கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி தள்ளிவிடப்பட்ட காட்சிகள்
லோகேஸ்வரி, பயிற்சியின் போது 2-வது தளத்தில் இருந்து கீழே குதிக்க அறிவுறுத்தப்பட்டார். கீழே அவரைப் பிடிக்க வலையை ஏந்தியபடி மாணவர்கள் நின்றனர். ஆனால் முதலில் தைரியமாக முன்வந்த லோகேஸ்வரி, பின்னர் பயந்து பின்வாங்கினார்.
லோகேஸ்வரியை ஒருகட்டத்தில் பயிற்சியாளர் பிடித்து தள்ளிவிட்டார். இதனால் தடுமாறி கீழே விழுந்த அவர் முதல் தளத்தின் சன்ஷேடில் மோதி படுகாயமடைந்து பலியானார். லோகேஸ்வரியின் மரணம், தமிழகத்தை அதிர வைத்திருக்கிறது.
Coimbatore college girl death incident: கோவை மாணவி லோகேஸ்வரி இறுதி நிமிடங்கள் VIDEO , To Read Click Here
லோகேஸ்வரி மரணம் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ5 லட்சம் நிதி உதவியை அரசு சார்பில் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்படும்.
லோகேஸ்வரி மரணம் .. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்
இதற்கிடையே மேற்படி பேரிடர் மேலாண்மை பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என்றும், அதில் பங்கேற்ற பயிற்சியாளர் தங்களின் அங்கீகாரம் பெற்றவர் இல்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி முகமை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மேற்படி அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், பலியான மாணவிக்கு இரங்கலையும் வெளியிட்டது.
லோகேஸ்வரி உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் உறவினர்கள், ஊர்க்காரர்கள், சக மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.