New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/14/lgp2A5uR1e7odrQH934p.jpeg)
Coimbatore
மேலும், நேற்று இரவு தனது நண்பரான செல்வராஜ் வீட்டிற்கு அருகில் சிலர் நோட்டமிட்டதாகவும், தனது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியுள்ளதாகவும் முகமது அலி ஜின்னா தெரிவித்துள்ளார்.
Coimbatore
கோவை: தங்கக் கட்டிகள் மோசடி தொடர்பாக புகார் அளித்த முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டல் வந்துள்ளதாக அவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, சஞ்சய் குமார் ரெட்டி என்பவருக்கு பொது அதிகார முகவராக உள்ளார். இவர் கடந்த வாரம் சைபர் கிரைம் பிரிவில் பண மோசடி குறித்து புகார் அளித்து சி.எஸ்.ஆர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது வழக்கறிஞர் நந்தகுமாருடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், முருகேசன், ரமேஷ், மைதிலி, முனீஸ்வரன், ஜெயப்பிரகாஷ், ஆதர்ஸ் நாராயணன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது தான் பண மோசடி குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், நேற்று இரவு சம்பந்தப்பட்ட நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேற்று இரவு தனது நண்பரான செல்வராஜ் வீட்டிற்கு அருகில் சிலர் நோட்டமிட்டதாகவும், தனது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியுள்ளதாகவும் முகமது அலி ஜின்னா தெரிவித்துள்ளார்.
குனியமுத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கால தாமதம் செய்வதால், தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உயிருக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிரட்டல் விடுத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.