தங்கத்தில் முகக்கவசம்; கோவையில் நகை செய்யும் நபர் அசத்தல்!

தங்க முகக்கவசத்திற்கு 9 ஆர்டர்களும் வெள்ளி முக கவசத்திற்கு 6 ஆர்டர்களும் இது வரை வந்துள்ளதாம்

By: July 20, 2020, 10:00:54 AM

Coimbatore goldsmith makes facemask using gold, silver strings : கொரோனா காலத்தில் முகக்கவசங்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கோவையை சேர்ந்த தங்க நகை செய்யும் ராதாகிருஷ்ணன் சுந்தரம் வெள்ளி மற்றும் தங்கத்தில் முகக்கவசங்களை செய்து அசத்தியுள்ளார்.  46.5 கிராம் (18 கேரட்) தங்கத்தால் செய்யப்பட்ட முகக்கவசத்தின் விலை ரூ. 2.75 லட்சமாகவும், 40 கிராம் (9.25 ஸ்டெர்லிங்) வெள்ளியில் செய்யப்பட்ட முகக்கவசத்தின் விலை ரூ. 15 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவரின் இந்த படைப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த முகக்கவசங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன். தங்கத்தால் ஆன முகக்கவசத்தை செய்ய 7 நாட்களும், வெள்ளியால் ஆன முகக்கவசத்தை செய்ய 6 நாட்களும் எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறார்.

ராதாகிருஷ்ணனின் இந்த முகக்கவசங்களை இதுவரை 9 நபர்கள் ஆர்டர் செய்துள்ளனர். நகைக்கடைகளில் இருந்து ஆர்டர் வந்தது மட்டுமின்றி தனி நபர்களிடம் இருந்தும் ஆர்டர் பெறப்பட்டு வருகிறது. 6 நபர்கள் வெள்ளியால் ஆன முகக்கவசங்களையும் ஆர்டர் செய்துள்ளனர். ஏற்கனவே தங்க நகை இழைகளை கொண்டு 5 வயது குழந்தைக்கு உடை தயாரித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றிருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coimbatore goldsmith makes facemask using gold silver strings

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X