Advertisment

இறந்தும் வாழும் இதயம்: கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த டெய்லரின் உடல் உறுப்புகள் தானம்

உடல் உறுப்பு தானம் செய்த சிவகுமார் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் அரசு மரியாதை செலுத்தி உடலை அனுப்பி வைத்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த டெய்லரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Advertisment

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் டெய்லர் சிவக்குமார் (40). இவர் கடந்த 7 ஆம்  தேதி இரவு சாலையைக் கடக்க முயன்ற போது வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். 

இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகுமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது. 

இதுகுறித்து அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கூறப்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது குடும்ப உறுப்பினர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவகுமார் இருதயம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்,  கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்,  இரண்டு சிறுநீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்,  கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது. 

உடல் உறுப்பு தானம் செய்த சிவகுமார் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் அரசு மரியாதை செலுத்தி பிறகு அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment