குடும்பத் தகராறில் துண்டான கை: மீண்டும் பொருத்தி கோவை அரசு மருத்துவர்கள் சாதனை

கோவையில் குடும்பத் தகராறில் துண்டிக்கப்பட்ட 30 வயது பெண்ணின் கையை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் 5 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து மீண்டும் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

கோவையில் குடும்பத் தகராறில் துண்டிக்கப்பட்ட 30 வயது பெண்ணின் கையை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் 5 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை செய்து மீண்டும் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
coimbatore hand

Coimbatore

கோவை, பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 30 வயதான தங்கமணி, குடும்பத் தகராறு ஒன்றில் தனது வலது கையை இழந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக வெட்டப்பட்ட அவரது கை, உடனடி மருத்துவ உதவிக்காகப் பதப்படுத்தப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காக வைக்கப்பட்டது.

Advertisment

பின்னர், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில், துண்டிக்கப்பட்ட கையுடன் தங்கமணி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உடனடியாக, மருத்துவர்கள் குழு அவரது ரத்த அழுத்தம் மற்றும் ரத்தக் குறைபாடுகளைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மறுநாள், ஆகஸ்ட் 22, அதிகாலை 12:15 மணிக்கு, ஒரு சிறப்பு மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சையைத் தொடங்கியது.

சுமார் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் செயல்பட்டனர். துண்டிக்கப்பட்ட கையில் உள்ள நான்கு நரம்புகள், ஆறு தசைகள், ஒரு தமனி மற்றும் ஒரு சிறை ஆகியவற்றை மிகக் கவனமாக ஒன்றிணைத்து, கையை மீண்டும் வெற்றிகரமாகப் பொருத்தினர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஐந்தாவது நாளாக தங்கமணியின் உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருகிறது. தற்போது அவருக்கு உயிரும், வெட்டப்பட்ட கையும் காப்பாற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அவருக்குத் தொடர்ந்து இயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

துண்டிக்கப்பட்ட கையை ஒட்டியுள்ள மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: